புரவி எடுப்பு விழா

திருப்பத்தூர் அருகே உள்ள கே.வயிரவன்பட்டி கிராமத்தில் மகிழம்பு அய்யனார் கோவிலில் புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-04-07 18:45 GMT

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ளது கே.வயிரவன்பட்டி கிராமத்தில் மகிழம்பு அய்யனார் கோவில். இக்கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புரவி எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான புரவி எடுப்பு விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் பெண்கள் கும்மி கொட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை குதிரை பொட்டலில் இருந்து ஊர் மந்தைக்கு கொண்டுவரப்பட்டது. வழியெங்கும் கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இரவு முழுவதும் மந்தையில் குதிரை வைக்கப்பட்டிருந்த நிலையில் கிராம பொதுமக்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து இரவு குதிரைக்கு முன்பாக கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மாலை குதிரை ஊர்வலமாக சென்று மகிழம்பூ அய்யனார் கோவிலுக்கு எடுத்து செல்லப்படும். இதில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் 50-க்கும் மேற்பட்ட குதிரைகள் மற்றும் மாடுகள் செய்யப்பட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்