குற்றங்களை தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் ரோந்து வாகனம்போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்

செங்கல்பட்டில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.;

Update: 2023-08-30 02:10 GMT

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 கொலைகள் நடந்தது. செங்கல்பட்டு கோர்ட்டு அருகே மற்றும் கலெக்டர் அலுவலகம் போன்ற பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் செங்கல்பட்டு நகர போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 67 ரவுடிகளும், செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 94 ரவுடிகள் உள்ளனர். இதனால் குற்ற சம்பவங்களை தடுக்க செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக செங்கல்பட்டு நகர போலீஸ் நிலையம் மற்றும் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்த செங்கல்பட்டு மாவட்டபோலீஸ் துறை திட்டமிட்டிருந்தது.

அதன்படி செங்கல்பட்டு நகர போலீஸ் நிலையத்தில் ரோந்து வாகனத்தை செங்கல்பட்டு மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு சாய்பிரனீத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத், செங்கல்பட்டு மாவட்ட தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர், செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழ், நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, நடராஜன் உள்ளிட்ட போலீஸ்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்