லிப்ட்டை இயக்காததால் நோயாளிகள் அவதி

கோவை அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட்டை இயக்காததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

Update: 2022-08-13 14:50 GMT

கோவை அரசு ஆஸ்பத்திரியில் லிப்ட்டை இயக்காததால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

அரசு ஆஸ்பத்திரி

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை, நீலகிரி மற்றும் கேரளா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 7 ஆயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் வருகிறார்கள். உள்நோயாளிகளாக 2 ஆயிரம் பேர் தங்கி சிகிச்சை பெறுகிறார்கள்.

கோவை அரசு ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் மொத்தம் 4 மாடிகள் உள்ளன. இங்கு சிறுநீரக சிகிச்சை பிரிவு, மருத்துவர்களுக்கான அறைகள், ஆலோசனை கூட்ட அரங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன. அங்குள்ள மாடிகளுக்கு செல்வதற்கு வசதியாக 2 லிப்ட்கள் உள்ளன.

நோயாளிகள் அவதி

இதில், ஒரு லிப்டில் நோயாளிகள் 3-வது மாடிவரை செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அருகில் உள்ள மற்றொரு லிப்ட் நல்ல நிலையில் இருந்தாலும் இயக்கப்படாமல் உள்ளது. இதனால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

ஒரு லிப்ட்டில் நோயாளிகள் மாடிகளுக்கு சென்று விட்டு வரும் வரை நீண்ட நேரம் ஸ்டெச்சரில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து நோயாளிகள் கூறும்போது, நோயாளிகள் சிரமம் இன்றி செல்வதற்கு தான் லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நல்ல நிலையில் இருந்தும் ஒரு லிப்ட்டை இயக்காமல் வைத்து உள்ளனர். அதையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரிகளிடமும் புகார் செய்யப்பட்டது என்றனர்.

இது குறித்து ஊழியர்கள் கூறும் போது, டாக்டர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரும்போது மட்டும் அந்த லிப்ட் இயக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்