பத்திர காளியம்மன் கோவில் வருசாபிஷேக விழா

கோவில்பட்டி பத்திர காளியம்மன் கோவில் வருசாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2022-09-13 15:52 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திர காளியம்மன் கோவில் வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை கும்பங்கள் எழுந்தருளல், விமான கோபுரங்களுக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூலஸ்தானத்தில் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து பொன்னம்பல நாடார் கலையரங்கம் முன்பு அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னதானத்தை நாடார் உறவின் முறை சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிச்செல்வம் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் கோவில் தர்மகர்த்தா எஸ்.எம்.மாரியப்பன், செயலாளர் மாணிக்கம், சங்க துணை தலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், கமிட்டி உறுப்பினர்கள் பாலமுருகன், திருப்பதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இரவு நாடார் தேங்காய், பழம், காய்கறி வியாபாரிகள் சார்பில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சிம்ம வாகனத்தில், வெள்ளிக்குடையின் கீழ் பத்திரகாளியம்மன் அமர்ந்து வீதி உலா நிகழ்ச்சி, டி.பி.ஆர்.மணி குழுவினர் நாதஸ்வரத்துடன் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்