படவேட்டு கோட்டை மலை வேணுகோபால சுவாமி கோவிலில் சனிவார வழிபாடு

கோட்டை மலை வேணுகோபாலசாமி கோவிலில் நடந்த சனிவார வழிபாட்டில் திரளான பக்தர்கள் மலையேறிச்சென்று சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2022-10-22 13:03 GMT

கண்ணமங்கலம்

கோட்டை மலை வேணுகோபாலசாமி கோவிலில் நடந்த சனிவார வழிபாட்டில் திரளான பக்தர்கள் மலையேறிச்சென்று சாமி தரிசனம் செய்தனர்.

வேணுகோபால சுவாமி கோவிலில் சனிவார வழிபாடு

கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு கோட்டைமலை வேணுகோபால சுவாமி கோவில் 2 ஆயிரத்து 660 அை உயர மலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி தொடங்கியதிலிருந்து வரும் 5-ம் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை சாமிக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் நடத்தி அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத வேணுகோபாலசுவாமி உற்சவம் நடைபெற்றது. மாலையில் படவேடு பகுதியில் சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.

பக்தர்கள் பல மணி நேரம் மலையில் நடந்து சென்று வேணுகோபாலசுவாமியை தரிசனம் செய்தனர்.

இதேபோல் கண்ணமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி அலங்காரம் நடைபெற்றது. மேலும் ஸ்ரீகிருஷ்ணர் கருடவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்