பசுவந்தனை கைலாசநாத சுவாமி கோவில் சித்திரை திருவிழா

பசுவந்தனை கைலாசநாத சுவாமி கோவில் சித்திரை திருவிழா வருகிற 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Update: 2023-04-18 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை ஆனந்தவல்லி அம்மாள் உடனுறை கைலாசநாத சுவாமி கோவில் கயத்தாறு மன்னராலும், பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் மன்னராலும், அதனைத் தொடர்ந்து எட்டப்ப நாயக்க மன்னரால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. பின்னர் ராஜராஜ சோழன் காலத்தில் இந்த கோவில் முழுமையாக கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோவிலாகும். இக்கோவிலில் பிரசித்திபெற்ற சித்திரைத் திருவிழா வரும் 25-ந்தேதி காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா நாட்களில் தினமும் கட்டளைதாரர்கள் சார்பில் காலை 8 மணி, இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா மற்றும் சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனை நடக்கிறது. 9-வது நாளான மே.2-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும், மே.4-ந்தேதி தீர்த்தவாரி திருவிழாவும், மே.5-ந்தேதி காலை 8 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணமும், காலை 10மணிக்கு சுவாமி, அம்பாள் பட்டணப்பிரேசமும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்