பசுபதி பாண்டியன் கொலை வழக்கு விசாரணை 27-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

திண்டுக்கல் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்ற பசுபதி பாண்டியன் கொலை வழக்கு விசாரணையை 27-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி சரண் உத்தரவிட்டார்.

Update: 2023-09-08 23:00 GMT

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவராக இருந்தவர் பசுபதிபாண்டியன். இவர், திண்டுக்கல் அருகே உள்ள நந்தவனப்பட்டியில் வசித்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பசுபதிபாண்டியன் தனது வீட்டு அருகே கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

மேலும் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை அடுத்த மூலக்கரையை சேர்ந்த சுபாஷ் பண்ணையார், முத்தையாபுரத்தை சேர்ந்த அருளானந்தம், நெல்லை சுரண்டையை சேர்ந்த ஆறுமுகசாமி, ராஜபாளையத்தை சேர்ந்த சண்முகம், புறாமாடசாமி, திண்டுக்கல்லை அடுத்த கரட்டழகன்பட்டியை சேர்ந்த முத்துபாண்டியன், நந்தவனபட்டியை சேர்ந்த நிர்மலா உள்பட 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் முத்துப்பாண்டியன், நிர்மலா உள்பட 5 பேர் கொல்லப்பட்டு விட்டனர்.

இதற்கிடையே பசுபதிபாண்டியன் கொலை வழக்கு திண்டுக்கல் சிறப்பு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணையை வருகிற 27-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி சரண் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்