பயணிகள் நிழலகம் அமைக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி அருகே சமத்துவபுரத்தில் பயணிகள் நிழலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.;

Update: 2023-02-10 18:45 GMT

கோட்டூர்:

திருத்துறைப்பூண்டி அருகே சமத்துவபுரத்தில் பயணிகள் நிழலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

சமத்துவபுரம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த எழிலூரில் சமத்துவபுரம் அமைந்துள்ளது. இங்கு 100 குடும்பங்கள் 15 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். சமத்துவபுரத்தில் இது நாள் வரை பயணிகள் நிழலகம் கட்டப்படவில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள், முதியோர் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று வரும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பயணிகள் நிழலகம்

மேலும் பயணிகள் நிழலகம் இல்லாததால் சில பஸ்கள் நிற்காமல் சென்று விடுகின்றன. இதனால் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தான் பஸ்சில் செல்ல முடிகிறது.

சமத்துவபுரத்துக்கு வெளியூரிலிருந்து வருபவர்களும் கஷ்டப்படுகிறார்கள். எனவே சமத்துவபுரத்தில் பயணிகள் நிழலகம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்