ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலகம்

இடும்பாவனம் அருகே ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2023-05-07 18:45 GMT

தில்லைவிளாகம்:

இடும்பாவனம் அருகே ஆபத்தான நிலையில் பயணிகள் நிழலகத்தை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சேதமடைந்த பயணிகள் நிழலகம்

முத்துப்பேட்டை அருகே பட்டுக்கோட்டை-வேதாரண்யம் சாலையில் உள்ள மேல பெருமழை கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இங்கு மக்களின் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழலகம் கட்டப்பட்டது. இந்த பயணிகள் நிழலகத்தை மேலப்பெருமழை, கீழப்பெருமழை, இடும்பாவனம், அடஞ்சவிளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வேதாரண்யம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்த பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகளும் இந்த பயணிகள் நிழலகத்தில் இருந்து பஸ்களில் சென்று வந்தனர். இந்த நிலையில் பயணிகள் நிழலகம் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது.

சீரமைக்க வேண்டும்

இந்த கட்டிடத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழலகம் இருப்பதால், அங்கு நின்று பஸ்சில் ஏறி செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

மேலும் மழை காலங்களில் தண்ணீர் உள்ளே வருவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்