வேலூர் புதிய பஸ் நிலையத்தில் குவிந்த பயணிகள்

விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களுக்கு செல்லவேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் குவிந்தனர்.

Update: 2023-10-01 18:36 GMT

பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை மற்றும் அரசு விடுமுறைகள் தொடர்ந்து வந்ததால், பொதுமக்கள் சொந்த ஊருக்கும், உறவினர் வீடுகளுக்கும் சென்றனர். விடுமுறை முடியும் தருவாயில் நேற்று மீண்டும் சொந்த ஊர்கள் மற்றும் பணி இடங்களுக்கு திரும்பியதால் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாகி வருகிறது.

இந்த நிலையில் தொலை தூர பயணம் செய்யும் பயணிகள், இன்று அரசு விடுமுறை தினம் என்ற போதும் ஒரு நாள் முன்னதாகவே ஊர்களுக்கு திரும்ப பயணம் மேற்கொண்டனர். இதனால் நேற்று நள்ளிரவு வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. குறிப்பாக தென் மாவட்டங்களான திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலத்திற்கு செல்லும் பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். பஸ்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இருக்கைகள் கிடைத்ததால், நின்று கொண்டாவது செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிகள் கூட்டம் கூட்டமாக காத்து நின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்