குடிநீருக்கு தொடர்ந்து பயணிகள் தவிக்கும் நிலை

விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் குடிநீருக்கு தொடர்ந்து தவிக்கும் நிலை உள்ளது.

Update: 2023-06-15 19:36 GMT


விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் பயணிகள் குடிநீருக்கு தொடர்ந்து தவிக்கும் நிலை உள்ளது.

குடிநீர் வசதி

விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில் பயணிகளுக்கான நிரந்தர குடிநீர் வசதி எதுவும் செய்யப்படாத நிலை உள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் முடங்கி விட்டது. ஏற்கனவே தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்டிருந்த குளிரூட்டப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் மாயமாகிவிட்டது. இந்தநிலையில் நகராட்சி நிர்வாகம் பல்வேறு தரப்பினர் வலியுறுத்திய பின்னரும் பயணிகள் குடிநீர் வசதிக்காக 2 சின்டெக்ஸ் தொட்டிகளை மட்டும் வைத்துள்ளது.

தவிக்கும் பயணிகள்

அதிலும் தினசரி குடிநீர் ஊற்றப்படாமல் அதிக இடைவெளி விட்டு குடிநீர் ஊற்றப்படுகிறது. நேற்று பயணிகளுக்கு சின்டெக்ஸ் தொட்டிகளில் குடிநீர் ஊற்றப்படவில்லை.

இந்த குடிநீர் தொட்டிக்கு அருகிலேயே நகராட்சி சுகாதார அலுவலகம் செயல்பட்டு வந்தாலும் அவர்களும் இதைப்பற்றி கவலை கொள்வதில்லை. மொத்தத்தில் பயணிகள் குடிநீருக்கு தொடர்ந்து தவிக்கும் நிலை தொடர்கிறது. எனவே நகராட்சி நிர்வாகம் பழைய பஸ் நிலையத்தில் அடிப்படை வசதியான குடிநீர் வசதியை நிரந்தரமாக செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்