மின்சாரம் தாக்கி பரோட்டா மாஸ்டர் சாவு

நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கி புரோட்டா மாஸ்டர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-10-22 18:45 GMT

நாமக்கல் மாவட்டம் காளப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் பிரபு (வயது 29). இவர் நாமக்கல்லை அடுத்த முள்ளம்பட்டி பிரிவு சாலை பகுதியில் உள்ள பேக்கரியுடன் இணைந்த ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். ஆயுத பூஜையையொட்டி நேற்று ஓட்டலை சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது பிரபு சுவிட்ச் பாக்ஸ்சை ஈர கையால் துடைத்ததாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட அவரை சக தொழிலாளர்கள் மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இங்கு சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்