பரோட்டா மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆம்பூர் அருகே பரோட்டா மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-09-30 17:25 GMT

ஆம்பூர் பி.எம்.எஸ். கொல்லை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). ஆம்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்