அரசு ஆஸ்பத்திரியில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு

சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு

Update: 2023-03-16 18:45 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்முருகன், சிந்தனை செல்வன், கார்த்திகேயன், பிரகாஷ், ராஜா ஆகியோரை கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்போது ஆஸ்பத்திரியில் கூடுதல் படுக்கை வசதிகளை அதிகப்படுத்துவது, புதிய கட்டிடம் கட்டுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, கலெக்டர் ஷ்ரவன்குமார், ஆய்வுக்குழு செயலாளர் சீனிவாசன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், கோட்டாட்சியர் பவித்ரா, சுகாதாரத்துறை நலப்பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர், டாக்டர் ராஜ்மோகன், தாசில்தார் சரவணன், மாவட்ட ஆவின் ஒன்றியக்குழு தலைவர் ஆறுமுகம், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திலகவதி நாகராஜன், பேரூராட்சி மன்ற தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை, தலைவர் ஆஷாபி ஜாகிர்உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்