நாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி தொடர்பாக பா.ஜ.க.- பா.ம.க. இடையே இழுபறி

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

Update: 2024-02-06 05:55 GMT

சென்னை,

ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அனைத்து கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன.

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க., பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. மற்றும் பிற கட்சிகளான பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி தனித்தனியாக தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருவதால் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பா.ஜ.க. - பா.ம.க. இடையேயான பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 12 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா இடத்தை பா.ம.க. கேட்பதாகவும் பா.ஜ.க. 7 இடங்களை தர முன்வருவதாகவும் கூறப்படுகிறது. பா.ஜ.க. ஒதுக்கும் தொகுதிகளை பா.ம.க. ஏற்க முன்வராததால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்