தோட்டத்தில் நிறுத்தியிருந்தடிராக்டர் தீ வைத்து எரிப்பு:மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
கூடலூரில் தோட்டத்தில் நிறுத்தியிருந்த டிராக்டருக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் கர்ணம் சந்து தெருவை சேர்ந்தவர் நந்தர் (வயது 62). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் கூடலூர் வடக்கு தியேட்டர் அருகே உள்ளது. விவசாய பணிகளுக்காக இவர் மினி டிராக்டர் வைத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர், உழவுப் பணிகளை முடித்து விட்டு டிராக்டரை தோட்டத்தில் நிறுத்தி இருந்ததார். நேற்று முன்தினம் அவர் தோட்டத்திற்கு சென்றார். அப்போது டிராக்டர் தீயில் எரிந்து எலும்பு கூடுபோல் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தர் கூடலூர் வடக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை தீ வைத்து எரித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.