உடுமலை ராஜேந்்திரா ரோட்டில் நகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்காவை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் பணியை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேம்பாட்டு பணி
உடுமலை நகரத்தில் ஆங்காங்கே சிறிய அளவிலான பூங்காக்கள் உள்ள நிலையில் ராஜேந்திரா ரோட்டில் உள்ள நகராட்சி பூங்கா பெரிய அளவில் உள்ளது. பிரதான பூங்காவாக இது இருப்பதால் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்கள் இந்த பூங்காவை பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் பூங்காவை மேம்படுத்தும் வகையில் இங்கு சீரமைப்பு பணி நடந்து வருகிறது. ஏற்கனவே பாழடைந்து காணப்பட்ட சில விளையாட்டு உபகணரங்கள் மாற்றப்பட்டு புதிய உபகணரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இருந்த மரக்கிளைகள், காய்ந்து போன கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பூங்காவின் தளங்களை சமன்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துரிதப்படுத்த வேண்டும்
பூங்கா மேம்படுத்தப்படுவது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், ஆரம்பத்தில் வேகமாக நடந்த சீரமைப்பு பணியில் தற்போது சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இங்குள்ள செயற்கை நீரூற்று காய்ந்த நிலையில் உள்ளது. இதேபோல் குழந்தைகளுக்கான ஊஞ்சல்கள் அமைந்துள்ள பகுதியில் குப்பை நிரம்பி கிடக்கின்றன.
இதனால் தற்போதைய சூழலில் இந்த பூங்காவை யாரும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் பொழுது போக்கு வசதியின்றி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, பூங்கா சீரமைப்பு பணியை துரிதப்படுத்தி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்