பரமக்குடியில் பராமரிப்பு இல்லாத சிறுவர் பூங்கா

பரமக்குடியில் பராமரிப்பு இல்லாத நிலையில் சிறுவர் பூங்கா உள்ளது.

Update: 2022-06-26 15:56 GMT

பரமக்குடி, 

பரமக்குடியில் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லை. எனவே பொழுதுபோக்கு இடம் இல்லாமல் சிறுவர் முதல் குழந்தைகள் வரை வீடுகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடந்து தொலைக்காட்சி மற்றும் செல்போன் ஆகிவற்றை பார்ப்பதில் நேரத்தை செலவிடுகின்றனர். இதைத் தொடர்ந்து நகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை பகுதியில் பொதுமக்கள், பல்வேறு அமைப்புகள், முக்கிய பிரமுகர்கள் நிதி பங்களிப்புடன் பல லட்சம் செலவில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. அதில் குழந்தைகள் விளையாட கூடிய ஊஞ்சல், சறுக்கு, சிறிய ராட்டினம் உள்பட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்து கிடைக்கிறது. இதனால் அதில் ஏறி அமர்ந்து விளையாடும் பொழுது சிறுவர்கள் உடல்களில் அடிபட்டு ரத்த காயங்கள் ஏற்படுகிறது. மேலும் பூங்காவிற்கு ஆவலோடு விளையாட வரும் சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் ஏதும் இல்லாததால் ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்லும் அவல நிலையும் உள்ளது.எனவே பொது மக்களின் சிறுவர்களின் நலன் கருதி அந்த சிறுவர் பூங்காவை நகராட்சி நிர்வாகம் மேம்படுத்தி புதிய விளையாட்டு உபகரணங்களை பொருத்தி புதுப்பிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்