அரசு பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கிய பெற்றோர்கள்
அரசு பள்ளிக்கு பெற்றோர்கள் கல்விச்சீர் வழங்கினர்.
தாமரைக்குளம்:
அரியலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பள்ளியின் ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு தேவையான ஸ்மார்ட் டி.வி., மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அமர்வதற்கான நாற்காலிகள், விளையாட்டு உபகரணங்கள், முதலுதவி பெட்டி, குடிநீர் தொட்டி உள்ளிட்டவற்றை மாணவ, மாணவிகளுடன் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச்சென்று பள்ளி தலைமை ஆசிரியர் அம்சவள்ளியிடம் வழங்கினர். இதில் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.