இளம்பெண்ணை அடித்து தூக்கிச்சென்ற பெற்றோர்- போலீசார் விசாரணை

காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை அடித்து தூக்கிச்சென்ற பெற்றோர் குறித்து போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

Update: 2023-01-26 18:45 GMT

தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியை சேர்ந்த ஒருவர் வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு தற்போது அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் சென்னையில் மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தென்காசி பகுதியில் மரக்கடை நடத்தி வருகிறார். இவரது மகளும், மென்பொருள் பணியாளரும் காதலித்தனர். இதன்பிறகு திருமணம் செய்து பதிவு செய்தனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு போலீசில் மனு அளித்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒரு மாத காலமாக இருவரும் இணைந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் மதியம் தென்காசி குத்துக்கல்வலசை பகுதியில் உறவினர் வீட்டில் இருந்தபோது பெண் வீட்டினர் அங்கு வந்து அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது பெற்றோரை அடித்து விட்டு, கார்களை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெண்ணையும் அடித்து வலுக்கட்டாயமாக தூக்கி சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக காட்சிகள் சமூகவலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் போலீசார் மீண்டும் இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்