திவான்சாபுதூர் அரசு பள்ளியில் பெற்றோர் -ஆசிரியர் கூட்டம்
திவான்சாபுதூர் அரசு பள்ளியில் பெற்றோர் -ஆசிரியர் கூட்டம்
ஆனைமலை
ஆனைமலை அடுத்த திவான்சாபுதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 620 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளியில் பெற்றோர் -ஆசிரியர் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை கவனிக்க வேண்டும், செல்போன்களை பள்ளிக்கு எடுத்துச் செல்ல பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது, திறமையாக விளையாடும், விளையாட்டில் ஆர்வம் உள்ள குழந்தைகளை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும், குழந்தைகளைப் பற்றி வகுப்பு ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் 250 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்