மோட்டார் சைக்கிள் விபத்தில் துணை ராணுவ வீரர் பலி
மோட்டார் சைக்கிள் விபத்தில் துணை ராணுவ வீரர் பலியானார்.
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சோபனபுரம் ஊராட்சி காஞ்சேரிமலைபுதூரைச் சேர்ந்தவர் ரவி (வயது 52). துணை ராணுவப் படையில் வீரராக பணியாற்றி வந்த இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து இருந்தார். இந்த நிலையில் இவர் காஞ்சேரிமலைப்புதூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் உப்பிலியபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது, தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.