பரமன்குறிச்சி முந்திரி தோட்டம்முத்தாரம்மன் கோவில் கொடை விழா

பரமன்குறிச்சி முந்திரி தோட்டம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா நடந்தது.;

Update: 2023-08-30 18:45 GMT

உடன்குடி:

பரமன்குறிச்சி முந்திரித்தோட்டம் முத்தாரம்மன் கோவிலில் ஆவணி கொடைவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இருந்து புனித நீர் எடுத்து பரமன்குறிச்சி பஜாரில் உள்ள வாகனம்காத்த விநாயகர் கோவிலில் வழிபாடு செய்த பின்னர், அங்கு இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக மேளதாளத்துடன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனையுடன் அம்பாள் மஞ்சள் நீராடுதல், நையாண்டி மேளத்துடன் அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு 8 மணிக்கு படைக் கஞ்சி வார்தல், நள்ளிரவு 12 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபராதனை மற்றும் பெண்கள் முளைப்பாரி எடுத்து அம்பாள் வீதியுலா நடந்தது, நேற்று காலையில் கொடை விழா நிறைவு சிறப்பு பூஜையுடன் உணவு பிரித்தல் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்