வாக்கைக் காப்பாற்றிய தேனிக்கார நண்பருக்கு, பரமக்குடியானின் வாழ்த்துக்கள் - கமல்ஹாசன் டுவீட்

சொன்ன வாக்கைக் காப்பாற்றிய என் தேனிக்கார நண்பருக்கு இந்தப் பரமக்குடியானின் வாழ்த்துக்கள் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Update: 2022-09-27 13:50 GMT

சென்னை,

இயக்குநர் சிகரம் என அழைக்கப்படும் பாரதிராஜா நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், பாரதிராஜாவிற்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார் இவ்வாறு தெரிவித்திருந்தது. 15 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையில் இருந்ததின் பயனாக அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வீடு திரும்பினார்.

இந்தநிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில்,

மருத்துவமனையில் நலம் விசாரிக்கச் சென்றபோது, ஆஸ்பத்திரியில் உங்களைப் பார்க்க எனக்குப் பிடிக்கவில்லை. சீக்கிரம் வீடு திரும்புங்கள், நான் புறப்படுகிறேன் என்று சொன்னேன். Ok see you later for sure, Bye என்று ஆங்கிலத்தில் சொல்லி வழியனுப்பினார். சொன்ன வாக்கைக் காப்பாற்றிய என் தேனிக்கார நண்பருக்கு இந்தப் பரமக்குடியானின் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்