பரமக்குடி யாதவர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

பரமக்குடி யாதவர் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர்.

Update: 2023-02-13 18:45 GMT

பரமக்குடி, 

பரமக்குடி யாதவர் சங்கம், யாதவர் திருமண மஹால், யாதவா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. அதில் முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன் தலைவராகவும், செயலாளர் மற்றும் யாதவா மெட்ரிக்குலேஷன் பள்ளியின் தாளாளராக முன்னாள் ஆசிரியர் அழகர்சாமி, பொருளாளராக கண்ணன், துணைத்தலைவர்களாக ஒ.பாஸ்கரன், தென்னவனூர் சந்திரன், துணைச்செயலாளராக செல்லக்காரி, இணைச் செயலாளராக சம்பத், கவுரவ தலைவராக கதிரேசன், கவுரவ ஆலோசகராக சங்கர் ராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் செயற்குழு உறுப்பினர்களாக அழ.வெள்ளைச்சாமி, ஓய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர் போஸ், கார்மேகம், முத்துச்சாமி, குபேரன் முருகேசன், துரைப்பாண்டி, சந்திரசேகரன், சேகர், ஹரிஹரன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சமுதாயப் பிரமுகர்களும், முக்கிய பிரமுகர்களும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்