பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகம்
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
பரமக்குடி,
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்திற்கு பாத்தியமான வண்டியூர் என்னும் காக்கா தோப்பில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் மற்றும் பதினெட்டாம்படி கருப்பணசாமி, ஸ்ரீ சுந்தர பாலா ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி காலை, மாலை யாகசாலை பூஜைகள் நடந்தது. பின்பு நேற்று காலை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது.
அப்போது அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பி சுவாமியை வழிபட்டனர். பின்பு சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன்பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் மானேஜிங் டிரஸ்டி டி.ஆர். நாகநாதன், டிரஸ்டிகள் பாலமுருகன், நாகநாதன், கோவிந்தன். முரளிதரன் ஆகியோர் செய்திருந்தனர்.