சுந்தரராஜ பெருமாள் கோவில் ஆடி தேரோட்டம்

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோவில் ஆடி தேரோட்டம்

Update: 2023-08-01 18:37 GMT

பரமக்குடி

பரமக்குடி ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழா 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் 24-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தினமும் சுந்தரராஜ பெருமாள் அன்ன வாகனம், சேஷ, கருடன், அனுமன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சுந்தரராஜ பெருமாள் அலங்காரமாகி தேரில் எழுந்தருளினார். பின்னர் பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் முழங்கி வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் மதியம் 2 மணிக்கு கோவிலை அடைந்த பெருமாளுக்கு பக்தர்கள் நூற்றுக்கணக்கான தேங்காய்களை உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்