பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற மாற்றுத்திறனாளி வீரர், வேலை வழங்கக்கோரி மனு
பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற மாற்றுத்திறனாளி வீரர், வேலை வழங்கக்கோரி மனு அளித்தார்.
குரும்பலூர் மெயின்ரோட்டை சேர்ந்த மோகனின் மகன் பார்த்தீபன். மாற்றுத்திறனாளியான இவர் பெரம்பலூர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில், நான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன். எனது குடும்பத்தை கவனித்து கொள்ளும் கடமையில் உள்ளேன். நான் கடந்த 2019-ம் ஆண்டு பாரா ஒலிம்பிக்கில் கூடைப்பந்து போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி 2-ம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம், சான்றிதழ் பெற்றுள்ளேன். எனவே என்னுடைய தகுதிக்கேற்ப ஒரு வேலையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.