பிறைகுடியிருப்பு அம்மன் கோவில் கொடைவிழா
பிறைகுடியிருப்பு அம்மன் கோவில் கொடைவிழா கொண்டாடப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி அருகேயுள்ள பிறைக்குடியிருப்பு தேவிஸ்ரீ முத்தாரம்மன், ஸ்ரீமகாமாரியம்மன், ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ உஜ்ஜைனிமகாளி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 3-ந்் தேதி தொடங்கியது அன்று இரவு 7 மணிக்கு அம்மன்களுக்கு மாகாப்பு அலங்காரம் மற்றும் கொடிபட்டம் பூஜை நடந்தது. கடந்த 4-ந்தேதி காலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 9 மணிக்கு கோவில் முன்புள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து பலவேறு பூஜைகள் நடத்தப்பட்டது. கடந்த 6-ந்தேதி காலை 7 மணிக்கு பால்பூஜை, மாலை 6 மணிக்கு அம்மன்கள் மஞ்சள் நீராடுதல், நள்ளிரவு ஒரு மணிக்கு சிறப்பு பூஜையுடன் அம்மன் சிம்மவாகனத்தில எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். கடந்த 7-ந் தேதி காலை 7 மணிக்கு தீபாராதனை, நன்பகல் 2 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, மாலை 6 மணிக்கு தீபாரதனை, நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு கொடைவிழா நிறைவு பூஜையும், நள்ளிரவு 12 மணிக்கு ஒத்தப்பனை சுடலை மாட சுவாமி கோவிலில் நடுஜாம சிறப்பு பூஜையும் அலங்கார வழிபாடும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.