ரூ.1 கோடி செலவில் பி.ஏ.பி. வாய்க்கால் சீரமைப்பு பணி

ரூ.1 கோடி செலவில் பி.ஏ.பி. வாய்க்கால் சீரமைப்பு பணி

Update: 2022-07-11 10:17 GMT

வெள்ளகோவில்

வெள்ளகோவிலில் ரூ.1 ேகாடி செலவில் பி.ஏ.பி. வாய்க்கால் சீரமைப்பு பணியை அமைச்சர் மு.ெப.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

பி.ஏ.பி. வாய்க்கால்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் வெள்ளகோவில் கிளை வாய்க்காலானது பரம்பிக்குளம் பிரதான கால்வாயில் 126 கிலோமீட்டரில் பிரிகிறது. கடந்த 1981-ஆம் ஆண்டு முதல் 1986-ஆம் ஆண்டு வரை பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட ஆயக்கட்டு பகுதிகளை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தின் அடிப்படையில் இந்த கிளை வாய்க்கால் அமைக்கப்பட்டது. இந்த வாய்க்காலின் மொத்த நீளம் 270 கிலோமீட்டர். இந்த வாய்க்காலானது 48 ஆயிரத்து 384 ஏக்கர் பாசன பரப்பை கொண்டதாகும். இதன் மொத்த ஆயக்கட்டு பரப்பு நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு முதலாம் மண்டலத்தில் 12,108 ஏக்கர், இரண்டாம் மண்டலத்தில் 12ஆயிரத்து176 ஏக்கர், மூன்றாம் மண்டலத்தில் 12 ஆயிரத்து 91 ஏக்கர், நான்காம் மண்டலத்தில் 12 ஆயிரத்து 7 ஏக்கர் பாசனம் பெறப்பட்டு வருகிறது.

திட்ட காலத்தில் அமைக்கபட்ட குறுக்கு கட்டுமானங்களான மதகுகள் மிகவும் சேதடைந்து இருந்தது. அவற்றை சீரமைக்க வேண்டி இருப்பதாலும், குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாசன காலங்களில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால் பாசன நீர் வழங்க இடையூர் ஏற்பட்டது. இதையடுத்து ரூ. ஒரு கோடி மதிப்பில் 6 இடங்களில் குழாய்களை அகற்றி சிறு பாலங்கள் அமைக்கும் பணியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.



Tags:    

மேலும் செய்திகள்