பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் 24-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-06-20 18:50 GMT

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில, 100 இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கூடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வருகிற 24-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இந்த தகவலை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்