இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகி தீக்குளிப்பதாக தகவல் தெரிவித்ததால் பரபரப்பு

இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு நிர்வாகி தீக்குளிப்பதாக தகவல் தெரிவித்ததால் பரபரப்பு

Update: 2023-02-06 18:45 GMT

கோத்தகிரி

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அ.தி.மு.க. பொதுக்குழு மூலமாகவே வேட்பாளரை தேர்தெடுக்க வேண்டும் எனவும், பொதுக்குழு ஒப்புதல் அளிக்கும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படும் எனவும் கோர்ட்டு அறிவித்துள்ளது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் அணியின் மாவட்ட நிர்வாகியான குன்னூரைச் சேர்ந்த ஒருவர் தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை 10 மணிக்கு கோத்தகிரி டானிங்டன் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை முன் தீக்குளிக்க போவதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த கோத்தகிரி சப்- இன்ஸ்பெக்டர் சேகர், மனோகரன் ஆகியோர் தலைமையில் அதிரடி படை போலீசார் சுமார் 20 பேர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால் அந்த நிர்வாகி தெரிவித்த நேரத்தில் அங்கு வரவில்லை. இருப்பினும் நேற்று மாலை வரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதற்கு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்