பண்ணாரி அம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.55½ லட்சம் உண்டியல் காணிக்கை

உண்டியல் காணிக்கை

Update: 2022-07-27 18:00 GMT

சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில். இங்கு மாதம் தோறும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணிக்கை நடைபெறும். அதன்படி நேற்று காலை 10 மணி அளவில் பண்ணாரி அம்மன் கோவில் மற்றும் வளாகத்தில் உள்ள 20 உண்டியல்கள் திறக்கப்பட்டன.

பின்னர் ஈரோடு அறநிலையத்துறை உதவி ஆணையர் அன்னக்கொடி மற்றும் கோவில் துணை ஆணையர் மேனகா முன்னிலையில் உண்டியல்கள் காணிக்கை எண்ணிக்கை பணி நடைபெற்றது. உண்டியல்களில் மொத்தம் ரூ.55 லட்சத்து 46 ஆயிரத்து 536, தங்கம் 329 கிராம், வெள்ளி 550 கிராம் இருந்தது. தனியார் பள்ளிக்கூட மாணவ மாணவிகள், பக்தர்கள், கோவில் பணியாளர்கள் ஆகியோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்