தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா:தங்கத் தேரோட்ட முன்னேற்பாடுகள்

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா தங்கத் தேரோட்ட முன்னேற்பாடுகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.

Update: 2023-06-16 18:45 GMT

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற உள்ள தங்க தேரோட்டத்துக்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் கீதாஜீவன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

தங்க தேரோட்டம் ஏற்பாடு

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா ஜூலை மாதம் 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வரை நடைபெறும். ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி அன்னையின் திருவுருவ சப்பர பவனி நடைபெறும். இந்த ஆண்டு தூத்துக்குடி மறைமாவட்ட நூற்றாண்டை முன்னிட்டு தங்கத்தேரோட்டம் நடக்கிறது. இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகின்றன.

அமைச்சர் ஆய்வு

இந்த நிலையில் தேரோட்டம் நடைபெறும் பகுதிகளில் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று மாலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேரோட்டம் நடக்கும் பகுதிகளில் சாலைகளை சீரமைப்பது, மக்கள் கூட்டத்தை சமாளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்வது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

கலந்து கொண்டவர்கள்

அப்போது, மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், உதவி கலெக்டர் கவுரவ்குமார், பனிமயமாதா ஆலய பங்குதந்தை குமார்ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்