திருமங்கலத்தில் பரபரப்பு: தூங்கிய நபரின் தலைக்கு அருகில் படமெடுத்த பாம்பு - கட்டிலில் இருந்து குதித்து தப்பினார்

திருமங்கலத்தில் தூங்கிய நபரின் தலைக்கு அருகில் படமெடுத்த பாம்பு , கட்டிலில் இருந்து குதித்து தப்பினார்

Update: 2023-05-09 20:59 GMT

திருமங்கலம்

திருமங்கலம் சந்தைப்பேட்டை அருகில் வசித்து வருபவர் தண்டபாணி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கி உள்ளார். நேற்று காலை தண்டபாணியை யாரோ எழுப்புவது போல் தோன்றவே விழித்துப் பார்த்தார். அப்போது தண்டபாணியின் தலைக்கு அருகில் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து நின்றிருந்தது.

இதை கண்டு அவர் பயத்தில் வெலவெலத்து போனார். பின்னர் மெதுவாக கட்டிலில் இருந்து குதித்தவர் கையில் கிடைத்த கம்பை எடுத்து கொண்டு பாம்பை அடிக்க முயன்றார்.

அதற்குள் அந்த பாம்பு நழுவி கட்டில் அருகில் இருந்த பை ஒன்றில் புகுந்தது. சுதாரித்த தண்டபாணி பைக்குள் பாம்பு புகுந்ததால் லாவகமாக பையில் இருந்த ஜிப்பை மூடினார். பின்னர் பாம்பு பிடி வீரரான சமூக ஆர்வலர் சகாதேவன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த சகாதேவன் உடனடியாக தண்டபாணி வீட்டிற்கு வந்து பையில் இருந்த ஜிப்பை திறந்த போது நல்ல பாம்பு சீறிக்கொண்டு வெளியில் வந்ததை கண்ட தண்டபாணி குடும்பத்தினர் அலறினர்.

பின்னர் பாம்பு பிடி வீரர் பாம்பை லாவகமாக பிடித்து அருகில் இருந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக கொண்டு சென்று விட்டார். இந்த சம்பவம் திருமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்