எஸ்.புதூர் பகுதிகளில்-பங்குனி பொங்கல் திருவிழா

எஸ்.புதூர் பகுதிகளில் பங்குனி பொங்கல் திருவிழா இன்று தொடங்குகிறது.

Update: 2023-04-01 18:45 GMT

எஸ்.புதூர்,

எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, தர்மபட்டி, கிழவயல், குளத்துப்பட்டி, அரியாண்டிபட்டி, குறும்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் ேகாவில்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காப்பு கட்டுதலுடன் பங்குனி பொங்கல் திருவிழா தொடங்குகிறது. காப்பு கட்டிய நாள் முதல் அந்தந்த ஊர் கோவில் முன்பாக பெண்கள் கும்மி அடித்தும், ஆண்கள் வைந்தானை அடித்து வழிபாடு செய்தும், காப்பு கட்டிய 8-வது நாள் பங்குனி பொங்கல் திருவிழா அன்று கிடாய் வெட்டியும், சேவல் அறுத்தும் பொங்கல் வைப்பர். அதனை தொடர்ந்து 9-ம் நாள் கொழுக்கட்டை, வைந்தானை குச்சி எறிதல், மாறுவேடமணிந்து நேர்த்தி கடன் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். 

Tags:    

மேலும் செய்திகள்