பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-03-28 18:45 GMT

திருவெண்காடு:

திருநகரி கல்யாண் ரங்கநாத பெருமாள் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ரங்கநாத பெருமாள் கோவில்

திருவெண்காடு அருகே திருநகரியில் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பஞ்ச நரசிம்மர்களின் யோக மற்றும் ஹிரண்ய நரசிம்மர்கள் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகின்றனர்.வைணவ பெரியார்களில் முக்கியமானவராக கருதப்படும் திருமங்கை ஆழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது. மேலும் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது.ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாள் இந்த கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.

கொடியேற்றம்

இந்த கோவிலில் பங்குனி பெருவிழா நேற்று காலை கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதனை ஒட்டி கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.பின்னர் கல்யாண ரங்கநாத பெருமாள் மற்றும் திருமங்கையாழ்வார் முன்னிலையில் பட்டாச்சாரியார்கள் கொடி ஏற்றி வைத்து திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி அன்பரசன், திருவிழா கமிட்டி செயலாளர் ரகுநாதன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்