செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் பங்குனித் திருவிழா வருகிற ஏப்.5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 13-ந்தேதி தேர் திருவிழாவும், 14-ந் தேதி தீர்த்தவாரி திருவிழாவும், 15-ந் தேதி தெப்ப திருவிழாவும் நடக்கிறது. இத்திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் பூஜை, விளா பூஜை, சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்பு கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி வெள்ளைச்சாமி, ஆய்வாளர் சிவகலை பிரியா மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.