சங்கிலி வீரன் கோவிலில் பங்குனி திருவிழா
திருத்துறைப்பூண்டி சங்கிலி வீரன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்தது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி சங்கிலி வீரன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சாமிக்கு கஞ்சி வார்த்தலும், சந்தனக்காப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குதிரை புறப்பாடாகி ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் முருகையன், மற்றும் பெரிய சிங்களாந்தி, கட்டிமேடு, கீழ சிங்களாந்தி, நெய்க்காரன் தோப்பு, ரெக்க குத்தகை, குத்தகை கிராம மக்கள் செய்திருந்தனர்.