கொட்டாம்பட்டியில் பகவதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா

கொட்டாம்பட்டியில் பகவதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா நடைபெற்றது.;

Update: 2023-04-09 19:55 GMT

கொட்டாம்பட்டி

கொட்டாம்பட்டியில் உள்ள மந்தை பகவதி அம்மன் கோவில் பங்குனி திருவிழா காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 8 நாட்கள் காப்பு கட்டிய பக்தர்கள் கடுமையான விரதம் மேற்கொண்டு நேற்று காலையில் கிராம தெய்வமான பொய்சொல்லா மெய் அய்யனார் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். அதன் பின்னர் பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, அலகுகுத்தி நேர்த்திக்கடனை செலுத்த மந்தைதிடல் வழியாக சுமார் 4 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.திருவிழாவை காண பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். மேலும் திருவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்