அய்யனார் கோவிலில் பங்குனி திருவிழா
அகரகடம்பனூர் அய்யனார் கோவிலில் பங்குனி திருவிழா நடந்தது.
சிக்கல்:
கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூர் மெயின் சாலையில் உள்ள கண்ணாகூத்த அய்யனார், பத்திர காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு பக்தர்கள் பெரியகுளத்தில் இருந்து பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.