திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில் பங்குனி திருவிழா

திருப்புவனம் புஷ்பவனேசுவரர்-சவுந்தரநாயகி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-03-26 18:45 GMT

திருப்புவனம்

திருப்புவனம் புஷ்பவனேசுவரர்-சவுந்தரநாயகி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பங்குனி திருவிழா

திருப்புவனத்தில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற புஷ்பவனேசுவரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது.. இந்த கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அப்போது புஷ்பவனேசுவரர்- சவுந்திரநாயகி அம்மனுக்கும், பிரியாவிடைக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு கொடிமரம் அருகில் கொண்டு வரப்பட்டது. பின்னர் சாமிக்கண்ணு பட்டர் 1-வது ஸ்தானீகம் வகையறாவினர் முன்னிலையில் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அப்போது சிலர் சங்கு ஊதி சிறப்பித்தனர்.

திருக்கல்யாணம்-தேரோட்டம்

பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பங்குனி திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் காலை, மற்றும் மாலை நேரங்களில் புஷ்பவனேஸ்வரர்-சௌந்திரநாயகி அம்மன் வெவ்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா வருகின்றனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 2-ந்தேதி காலை 11 மணிக்கு மேல் திருக்கல்யாண வைபவமும், மறுநாள் தேரோட்டமும் நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில், மேலாளர் இளங்கோ, திருப்புவனம் சரக கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்