பால்வண்ணநாத சுவாமி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2023-04-03 18:45 GMT

சங்கரன்கோவில்:

கரிவலம்வந்தநல்லூரில் ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலின் துணைக்கோவில் ஆகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படும். தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்