பந்தலூர் நீதிபதி ஆய்வு

நீதிமன்றம் அமைய உள்ள இடத்தை பந்தலூர் நீதிபதி ஆய்வு செய்தார்.

Update: 2022-12-11 18:45 GMT

பந்தலூர், டிச.12-

பந்தலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அட்டி செல்லும் சாலையோரத்தில் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. ஆக்கிரமிப்பில் இருந்த அந்த நிலத்தை கடந்த ஆண்டு வருவாய்த்துறையினர் மீட்டனர். அங்கு விளையாட்டு மைதானத்தையொட்டி நீதிமன்றம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் கைப்பந்து, கால்பந்து வீரர்கள் நீதிமன்றம் கட்டினால் விளையாட தடை ஏற்படும். எனவே, வேறு இடத்தில் நீதிமன்ற கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை நீதிபதி, கூடலூர் ஆர்.டி.ஓ., பந்தலூர் தாசில்தார் ஆகியோரிடம் மனு அளித்தனர். அதன் பின்னர் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு கட்டப்பட இருந்த இடத்தில், 2 ஏக்கர் 68 சென்ட் நிலத்தில் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக நீதித்துறையிடம் நிலம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்தநிலையில் நீதிமன்றம் அமைய உள்ள இடத்தை மாவட்ட முதன்மை நீதிபதி முருகன் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதன்படி பந்தலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சிவகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர் லட்சுமி சங்கர், கிராம நிர்வாக அலுவலர் கர்ணன், நில அளவையர் செந்தில் கண்ணன் உடனிருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்