ஊராட்சி தலைவர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஜாமீனில் வந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஊராட்சி தலைவர் உள்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து உள்ளது.
குடவாசல்;
திருவாரூர் மாவட்டம் மணவாளநல்லூரில் ஒரு கொலை வழக்கில் ஜாமீனில் வந்த சந்தோஷ்குமார் என்பவா் கடந்த ஜூன் மாதம் 19-ந்தேதி வெட்டிக்ெகாலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மணவாள நல்லூர் ஊராட்சி தலைவராக இருந்த பிரபாகரன் மற்றும் 8 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் மணவாளநல்லூர் ஊராட்சி தலைவர் பிரபாகரன், சேகர் மகன் சாமிநாதன், செல்வராஜ் மகன் விக்னேஷ் ஆகிய 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கலெக்டர் காயத்ரிகிருஷ்ணனுக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்ற கலெக்டர் 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் பிரபாகரன், சாமிநாதன், விக்னேஷ் ஆகிய 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.