மோகனூர்:-
மோகனூர் அருகே பெரமாண்டம்பாளையம் ஊராட்சி மோளக்கவுண்டனூர் காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 46). இவர், பெரமாண்டம்பாளையம் ஊராட்சி உறுப்பினராகவும், தி.மு.க. கிளைச் செயலாளராகவும், உள்ளார், இவர், 10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற சிறுவனுக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.