கோவில்பட்டியில் பஞ்சாயத்து யூனியன் சிறப்பு கூட்டம்

கோவில்பட்டியில் பஞ்சாயத்து யூனியன் சிறப்பு கூட்டம் நடந்தது.

Update: 2022-12-29 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் கூட்ட அரங்கில் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பஞ்சாயத்து யூனியன் தலைவர் எஸ். கஸ்தூரி சுப்புராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் சுப்புலட்சுமி, மேலாளர் முத்துப்பாண்டி, இன்ஜினீயர்கள் சங்கர சுப்பிரமணியன், படிபீவி, மேரி மற்றும் யூனியன் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டுக்கான 15-வது மத்திய நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் 9 பஞ்சாயத்துகளுக்கு 13 குடிநீர் திட்ட பணிகளுக்காக ரூ.39 லட்சத்து 10 ஆயிரம்,

9 பஞ்சாயத்துகளுக்கு 11 சுகாதாரப் பணிகளுக்காக ரூ.45 லட்சத்து 15 ஆயிரமும், 6 பஞ்சாயத்துகளில் சாலை மற்றும் வாறுகால் அமைக்க ரூ.29 லட்சத்து 92 ஆயிரமும், 11 பஞ்சாயத்துக்களில் அங்கன்வாடி மற்றும் பள்ளி கட்டிடங்கள்

பழுது நீக்கும் 17 பணிகளுக்கு ரூ.28 லட்சத்து 64 ஆயிரத்து 494 -ம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்