கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

ரூ.3 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2023-05-15 17:09 GMT

மொரப்பூர்

கடத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் ரூ.3 கோடியே 9 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது. இந்த அலுவலக கட்டிடத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதன் தொடர்ந்து கலெக்டர் சாந்தி, செந்தில்குமார் எம்.பி., கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் யசோதா மதிவாணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் மரியம் ரெஜினா, கடத்தூர் ஒன்றியக்குழு தலைவர் உதயா மோகனசுந்தரம், துணைத்தலைவர் சக்திவேல், ஒசஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் குத்து விளக்கேற்றினர்.

இந்த விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கல்பனா, ரவிச்சந்திரன், கடத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சிவபிரகாசம், கிழக்கு ஒன்றிய செயலாளர் நெப்போலியன், பேரூர் செயலாளர் மோகன், வக்கீல் முனிராஜ், தர்மபுரி கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் அரசாங்கம், பேரூராட்சி தலைவர் கே.மணி, துணை தலைவர் தீர்த்தகிரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்