ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

Update: 2022-12-27 18:45 GMT

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் பகண்டை கூட்டுரோட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக மன்ற கூடத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் துரைமுருகன் வரவேற்றார். உதவியாளர் பிரபாகரன் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிறப்பு திட்டங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவியேற்ற உதயநிதிஸ்டாலினுக்கு ஒன்றியக்குழு சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினகர்பாபு, ரமேஷ், கவுன்சிலர்கள் மற்றும் பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்