ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.;

Update: 2022-10-08 15:52 GMT

சேத்துப்பட்டு

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் ராணி அர்ஜுனன் தலைமை தாங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, ரேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு துணை தலைவர் முருகையன் வரவேற்றார்.

இதில் அனைத்து கவுன்சிலர் கலந்து கொண்டனர். வரவு செலவு திட்டங்கள் வாசிக்கப்பட்டது.

கூட்டத்தில் சேத்துப்பட்டு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் நாராயணமூர்த்தி, ஆரம்ப சுகாதார மேற்பார்வையாளர் நாகராஜன் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்